செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நீட்டை பொறுத்தவரை பல்வேறு சமயங்களில் இதற்கான மிகப்பெரிய விவாதம்… இதற்கு என சட்டம் அதன் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ? நீட்டை தமிழகத்திற்கு மட்டும் தடையாக விலக்கு கொடுக்க முடியுமா ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட நீட் என்பது மீண்டும் ஒரு மாநிலத்திற்காக தனியாக  விலக்கு அளிக்க முடியுமா? இது ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கல்.

இரண்டாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை உடனடியாக ரத்து செய்வோம் என்று சொன்னது திராவிட முன்னேற்ற கழகம். எங்களுக்கு அந்த ரகசியம் தெரியும் என்று சொன்னவர் இன்றைய விளையாட்டு துறை அமைச்சர். இன்று தாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருட காலம் ஆன பின்பாக கூட இன்னும் எந்த அரசியல் மாற்றத்தை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவேளை முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னொரு அரசியல் மாற்றம் மத்தியிலே நடக்கும் என்று அவர் கூறினார் என்றால் ? அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம். ஒருபோதும் மத்தியிலே அரசியல் மாற்றம் என்பது ஏற்படாது. மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுதான் அமையப்போகிறது.

அதனால் ஏற்கனவே தமிழக மக்களுக்கு ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து..  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம் என்ற பொய் வாக்குறுதி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றியது போல,  இன்னும் ஒரு ஏமாற்று வாக்குறுதிக்கு அவர் தயாராகிவிட்டார் எனத் தோன்றுகிறது என தெரிவித்தார்.