சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் அருகே மெட்ரோ சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் திடீரென வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ சுரங்கப் பணியில் ஏற்படும் அதிக அழுத்தம் என கூறப்படுகிறது. வீட்டின் குறிப்பிட்ட பகுதி உள்வாங்கிய போது வீட்டில் உரிமையாளர்கள் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மெட்ரோ நிர்வாகம் கருத்தில் கொண்டு வீட்டை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறிய விளக்கம், மெட்ரோ பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் செயல்பட்டு வருகிறோம் சில இடங்களில் கடினமான பாறை, மண் போன்றவற்றை தகர்க்கும் பொழுது இவ்வாறு சில சம்பவங்கள் நடைபெறுகின்றன இது குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை சுரங்க வேலையால் உள்வாங்கிய வீட்டின் பராமரிப்பு மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும்.

வீடு பராமரிப்பு முடியும் வரை வீட்டின் உரிமையாளர் தங்கும் வாடகை வீட்டின் கட்டணமும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. வீட்டின் முறையான மறு சிரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் வீட்டின் உரிமையாளர்களுக்கு வீட்டில் குடியேற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் மற்ற வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து பயப்படத் தேவையில்லை. மண்ணின் தரத்தை தொடர்ந்து பல முறை ஆய்வு நடத்தி வருகிறோம் என்று விளக்கம் அளித்துள்ளது.