செய்தி வாசிப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி சின்னத்திரை தொடரில் நடித்ததன் வாயிலாக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து மேயாத மான் படம் வாயிலாக ஹீரோயினியாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை போன்ற 4 திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய உணவகம் குறித்து பிரியா பவானி சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இது எங்களது சொந்த உணவகம். எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்களுக்கு பரிமாற காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.