கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை  தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து நான்காவது நாளாக ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.   ஏழு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் அரசு ரப்பர் கழகத்திற்குரிய மக்களுக்கு வெளியேற முடிதா யாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.