செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாங்க கூட  ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு ஆதரவா பல இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு உறுதியாக நாங்கள் இணைந்திருக்கிறோம்.

இந்தியாவில் இந்தியா கூட்டணி என்பது அளவில் உறுதியா செயல்படுகிறோம். ஏனென்றால் ஒரு மின்சார கட்டணம் அல்ல அது மாதிரி 100 மடங்கு இந்த நாட்டுக்கு மோசமான நடவடிக்கையில் பாஜக மேற்கொண்டு வருகிறது. எனவே அந்த ஆட்சியை எதிர்த்து வீழ்த்துகின்ற போராட்டத்தில் நாங்கள் திமுகவுடன் இணைந்து நிற்கிறோம். அதே சமயத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்யக்கூடிய சில நல்ல நல்ல விஷயங்களை வரவேற்கவும் செய்கிறோம்.

பெண்கள் உரிமை தொகையை போன்றவற்றை வரவேற்கின்றோம்.  அதே சமயத்தில் திமுக அரசின் மீது சில குறைகள் இருக்குன்னா….  அதை நாங்கள் சுட்டிக்காட்டியதில் தவறியதே கிடையாது. 8 மணி நேரம் நேரத்தை அவுங்க திருந்தினார்கள். நாங்க தான் போராட்டம் அறிவித்தோம். சட்டமன்றத்தில் வெளிநடப்பு பண்ணுனோம். பிறகு முதலமைச்சரே எல்லாரையும் கூட்டு பேசி,  நாங்க அந்த சட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம்னு சொல்லிட்டாரு.

மின்சார கட்டணம் உள்ளிட்ட அந்த பிரச்சனைகளில்  இப்பவும் முதலமைச்சருக்கு நாங்க சொல்லி இருக்கிறோம். நீங்க தொழில் துறையை அழைத்து  பேச்சுவார்த்தை நடத்துங்க. அவுங்க  கோரிக்கைகளை முற்றிலுமாக நிறைவேற்றுவதற்கு நீங்க முயற்சி பண்ண வேண்டும் என்பதை  நாங்கள் வலியுறுத்தினோம். வருகின்ற  9ஆம் தேதி கூடுகின்ற சட்டமன்றத்தில் நாங்கள் நிச்சயமாக குரல் எழுப்புவோம் என தெரிவித்தார்.