என்னய்யா இது.. அடுத்தடுத்த மேட்ச்ல இப்படியா அவுட் ஆவாங்க!” என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே தலையில் கைவைத்து வியக்கும் வகையில், ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் மீண்டும் ‘ஹிட்-விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்து வரலாற்றுச் சாதனை (!) படைத்துள்ளார்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா போட்டியில், பிரிஜேஷ் சர்மா வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாய் சுதர்சனின் மட்டை, எதிர்பாராதவிதமாகப் பிடியிலிருந்து நழுவி ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது; குவாலிஃபையர் 1-லும் இதேபோல அவுட்டானதால், ஐபிஎல் வரலாற்றிலேயே அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் ஹிட்-விக்கெட் ஆன முதல் பேட்ஸ்மேன் என்ற விசித்திரமான அசிங்கத்தைப் பெற்றார்.

“>

 

இதைப் பார்த்தவுடன் எதிர்முனையில் இருந்த கேப்டன் ஷுப்மன் கில், அப்படியே நிலைகுலைந்து, நம்ப முடியாமல் அதிர்ச்சியில் தரையிலேயே விழுந்துவிட்டார்.

இருப்பினும், இந்த சோகத்தையும் தாண்டி கேப்டன் கில் அதிரடியாக 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து மிரட்ட, சாய் சுதர்சனின் 58 ரன்கள் பங்களிப்போடு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த குஜராத் அணி, ராஜஸ்தான் நிர்ணயித்த 214 ரன்கள் (வைபவ் சூர்யவன்ஷி 96) மெகா இலக்கை 18.4 ஓவர்களில் அசால்ட்டாக எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கெத்தாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மாஸ் காட்டியுள்ளது!