
டெல்லியில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளருமான வெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதில் அவர் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கெஜ்ரிவால் மீது பண மோசடி வழக்கு தொடர அமலாக்குத்துறை மத்திய உள்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறியதாவது, மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி முறைகேடு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் நான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அனுமதி தேவை என்று நினைத்த அவர்கள், இந்த வழக்கை வேண்டுமென்றே போடப்பட்டது என்று தெரிகிறது. இதனால் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.