பட்ஜெட் என்பது பிரெஞ்சு வார்த்தையான “போஜட்” என்பதிலிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 18-ம் நூற்றாண்டின் போது பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சர் அரசின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்ஜெட்டை திறங்கள் என்று பொருள்படும் விதமாக நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்படும். பட்ஜெட் உரைகள் அனைத்தும் ஒரு சூட்கேசில் வைத்து நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை திறக்க வேண்டும் எனும் விதமாக அன்றைய நாளிலிருந்து சூட்கேஸூக்குள் பட்ஜெட் உரைகள் வைக்கப்படுகிறது. இந்த சூட்கேஸ்களின் வண்ணம் கருப்பு, சிவப்பு,பழுப்பு  போன்ற நிறங்களில் இருக்கலாம். 1960 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் நிதி அமைச்சர் ராணியின் உருவப்படம் குறித்த சூட்கேஸூக்குள் பட்ஜெட் உரைகள் வைத்திருந்தார்.

அந்த சூட்கேஸ் ஆனது சிவப்பு நிறத்தில் இருந்தது. அதன் பின் அவர் பிரதமரான போதிலும் பல்வேறு துறைகளில் முக்கிய கோப்புகளை வைக்க சூட்கேஸ்கள் பயன்படுத்தப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு நாட்டின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்துள்ளார். அப்போது தோல் பையில் பட்ஜெட் உரைகள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் 10 ஆண்டுகளுக்குப் பின் நிதி அமைச்சர் டி.டி பை போன்ற ஒன்றில் பட்ஜெட் பேப்பர்களை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1958 இல் நேரு பட்ஜெட் தாக்கல் செய்தபோது கருப்பு நிற சூட்கேஸை கொண்டு வந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1991இல் பட்ஜெட் தாக்கல் செய்த போது கருப்பு நிற சூட்கேஸையும், வாஜ்பாய் அரசில் யஷ்வந்த் சின்ஹா கருப்பு நிற சூட்கேஸையும், மன்மோகன் சிங் அரசியல் நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி சிவப்பு நிற சூட்கேஸையும் வைத்திருந்தனர்.