
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது.
AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது. கேதார்நாத்தில் உள்ள ஹெலிபாட் அருகே வந்தபோது, ஹெலிகாப்டர் கீழே உள்ள சமதள பகுதியில் மிகுந்த அதிர்ச்சியுடன் தரையிறங்கியது.
இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் இருந்தனர். தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட அவசர நிலையை புரிந்துகொண்ட பைலட், ஹெலிபாட் வரையிலான இறுதிக் கணங்களில் சிறந்த முடிவெடுத்து அருகிலுள்ள சமதள இடத்தில் பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தார்.
இருந்தாலும் ஹெலிகாப்டரின் வால் பகுதி தரையில் மோதி முறிந்துவிட்டது. சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூவரும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வீடியோவில், ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென எதிர்மறை சுழற்சி ஏற்பட்டு tail rotor உடையும் காட்சிகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
ருத்ரப்ரயாக் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் ராகுல் சௌபே தெரிவித்ததுப்படி, இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும், விபத்துக்கான காரணங்களைத் தெளிவாக அறிய Director General of Civil Aviation விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். AIIMS ரிஷிகேஷ் நிர்வாகம், ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.