அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீடுகள் மற்றும் சாலைகளில் நீர் மூழ்கியுள்ளது. இதில் சென்ற வார இறுதியில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் கெண்டகி மாகாண கவர்னர் பெஷீர் கூறியதாவது, கெண்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் பெய்த கடும் மழையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

“இப்போதே சாலைகளில் இருந்து விலகி உயிருடன் இருங்கள்”எனவும் எச்சரித்துள்ளார். மேலும் ஜார்ஜியாவில், பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்ததால் வீட்டினுள் படுத்திருந்த நபர் ஒருவர் இறந்துள்ளார். அவரோடு சேர்த்து இதுவரை 9 மரணம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர் சூறாவளியால் எட்டு மாநிலங்களுக்கு இடையே அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வேகமாக மழை பெய்ததால் ஆற்றின்  நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டுள்ளன. மேலும் வெள்ள அபாயம் உள்ளது எனவும் பெஷீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.