அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளிவராமல் தவித்து வருகிறார்கள். இந்த பனிப்புயலில் 60க்கும்  அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்த பாதிப்பு நீங்குவதற்குள், அமெரிக்க நாட்டில் தற்போது இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் வேரோடு மரங்கள் சாய்ந்திருக்கின்றன. எனவே, போக்குவரத்தும் கடும் பாதிப்படைந்திருக்கிறது.

குடியிருப்புகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக, கொட்டி தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்திருக்கிறது. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, தற்போது மேலும் பலத்த மழை பெய்து வருகிறது.