சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார்.

சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற உலகிலேயே பொருளாதாரத்தில் முக்கியமான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைந்திருக்கிறது.

எனவே, கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் கடினமான நிலையாக இருக்கும். உலக அளவில் பொருளாதாரமானது, மூன்றில் ஒரு பங்கு மந்த நிலையில் காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பொருளாதார மந்த நிலையை உணர்வார்கள்.

40 வருடங்களில் முதல் தடவையாக கடந்த வருடத்தில் சீன நாட்டின் வளர்ச்சி, உலக வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் குறைந்தோ அல்லது அதற்கு சமமான அளவிலோ இருந்திருக்கும். சுமார் 190 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பின் குறிக்கோள், உலகப் பொருளாதாரத்தை நிலையான தன்மையில் வைத்திருப்பது தான்.

பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுவது பற்றி முன்பே எச்சரிப்பது சர்வதேச நாணய நிதியத்தினுடைய முக்கியமான வேலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.