சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மேலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கிறது. தொடர் சாரல் மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.