
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாய பெருங்குடி மக்கள் உரிய விலையை கொடுங்கன்னு சொல்றாங்க… நாங்க விளைய வச்ச பொருளை கொள்முதல் செய்யும் போது அதுக்கு உரிய விலையை கொடுங்கன்னு சொல்றாங்க… இந்த நாட்டுல அத்தியாவசிய உயிர் தேவையா இருக்குற உணவு பொருட்களை நான் பாடுபட்டு விளைய வச்சு கொடுத்தா… நீ தெருவுல போடுவ…. தார்பாயை போட்டு மூடி வைப்ப. அது மலையில நனைஞ்சு ஈ, எறும்பு தின்னு முளைச்சு போகும்.
நான் கண்ணீரோடும், கவலையோடும் விஷம் குடித்து சாவேன். நீ குடிக்கிற டாஸ்மார்க் சரக்கை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து, கண்காணிப்பு கருவி வைத்து, காவல்துறையை போட்டு, பாதுகாப்பு போட்டு பாதுகாப்ப… மாவட்ட தலை நகர்லையாவது உணவு சேகரிப்பு கிடங்கு இருக்கா ? யாராவது சொல்லுங்க நீங்க…. அப்புறம் இந்த ஆட்சி முறையை தகர்க்கனும்.
நான் வந்தா இலவசம் பெற வேண்டிய நிலையில் இல்லாத அளவுக்கு என் மக்கள் வறுமையின்மை நிலை இல்லாமல், வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன். நான் கொடுக்க நினைக்கிறது தரமான கல்வி, சமமான கல்வி. தரமான மருத்துவம், சமமான மருத்துவம். ஏழை – பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அறிவை வளர்க்கும் கல்வி, உயிரை காக்கும் மருத்துவமும் என் மக்களுக்கு சரியாக கொடுத்திட்டாலே அவனுக்கு பாதி காசு மிச்சம், செலவு இல்லை என தெரிவித்தார்.