உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது  “ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னாதேவி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் குமார், நீதிபதியின் கண்டனத்தைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் இது.

சச்சின் குமார் சமீபத்தில் பைக் திருட்டு வழக்கில் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். ஆனால், நீதிபதி திரிபாதி, சச்சின் குமார் வழக்கிற்காக போலியான நபர்களை அழைத்து வந்துள்ளதாகக் கூறி அவரைக் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், சச்சினைக் நீதிமன்றத்திலேயே தங்க வைத்து ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் அவரைக் கூப்பிட்டுத் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தண்டவாளத்தில் அமர்ந்தவாறு நீதிபதி என்னை அடிக்கடி திட்டுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் கதறி அழுதார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சச்சின் குமார், அருகிலிருந்த ரயில்வே டிராக்கிற்கு சென்று தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சக போலீசார் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.