தமிழக அரசின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் அவ்வபோது வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான தகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு,

1. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தரவு பணி உள்ளீட்டாளர்) பதவிக்கு பணியிடங்கள் நிரப்ப உள்ளன.
2. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது கணினி பயன்பாடு குறித்த டிப்ளமோ படிப்பை விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும்.
3. இந்தப் பணிக்கு மாதம் 13,500 ரூபாய் வழங்கப்படும்.
4. இந்தப் பணிக்கான முக்கிய நிபந்தனை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
5. ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவதால் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
6. இந்தப் பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
7. 20.11.2024 அன்றே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. கௌரவ செயலாளர், துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
மேற்குறிப்பிட்ட இந்த விலாசத்திற்கே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.