திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் வேலைகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளன. திருநெல்வேலி பகுதியில் 80 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விதிமுறைகள் பின்வருமாறு,
1. விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு பள்ளியில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு குறித்த விவரங்களை பொது தளத்தில் சென்று பார்வையிடவும்.
3. மாத சம்பளம் ரூபாய் 8600-ரூபாய் 29,000 வரை வழங்கப்படும்.
4. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசாங்க இணையதள பக்கத்தில் https://drbtny.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
5. நவம்பர் மாதம் 7 தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின் விண்ணப்பிப்போர் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.