அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கின்றது. இதில் 90 உறுப்பினர்களை கொண்ட இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பா.ஜ.க தனித்து போட்டியிடுகின்றது. அதேபோல காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிடுகின்றது.

இதனைத் தொடர்ந்து ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து தேர்தலில் போட்டியிடப் போகின்றன. ஆகையால் பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதியம் பாஜாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி அசோக் தன் வார் பிரச்சாரம் செய்துள்ளார்.

பின்னர் மதியம் 2 மணி அளவில் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். ஒரு மணி நேர இடைவேளையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவிய சம்பவம் அரசியல் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எம்.பி-யாக இருந்த இவர் இப்படி கட்சி மாறுவது முதன்முறை அல்ல.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 3 கட்சிகளுக்கு சென்று விட்டு தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் 2014 – 2020 ஆம் ஆண்டு வரை அரியானா காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த இவர் 2021 ஆம் ஆண்டு திரிணமுள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இதில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.