
இளைஞர் சொந்தமாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் Prime Ministers Employment Generation Programme (PMEGP) என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. குறைந்த வட்டியுடன் அரசு மானியத்துடன் கடன் கிடைப்பதால் அதனை அடைக்கவும் எளிதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் பயனாளிகளுக்கு கடனில் இருந்து 35%, நகர் புறத்தில் இருந்து வரும் பயனாளிகளுக்கு கடனில் இருந்து 25% மானியம் வழங்கப்படுகிறது.
சொந்த தொழில் செய்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் நல்ல வாய்ப்பாகவும், இதனால் வேலை வாய்ப்புகளுக்கு உருவாகும். இந்த திட்டத்தை பெறுவதற்கு தகுதிகள் என்னவென்றால், 18 வயது பூர்த்தி அடைந்திருந்க வேண்டும், நீங்கள் தொடங்கும் தொழில் உள்நாட்டு உற்பத்தி தொழிலாக இருக்க வேண்டும், உங்களுடைய செலவை பொறுத்து இந்த கடன் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கும். இந்த கடனை பெறுவதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட், வணிகம் தொடர்பான ஆவணங்கள், ஜி.எஸ்.டி மற்றும் நில ஆவணங்கள் பதிவு எண் ஆகியவை கட்டாயமாக தேவைப்படும்.
இந்த திட்டத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே எளிதில் விண்ணப்பிக்கலாம் PMEGP எனப்படும் https://www.kviconline.gov.in/pmegpeportal/bankModule/index.jsp என்ற இந்த இணையதளத்திற்கு சென்று தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மெயில் ஐடி, போன்ற தகவல்களுடன் இன்னும் சில தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து முடித்ததும் உங்கள் பெயரில் கணக்கு உருவாகிவிடும். விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் உங்களுடைய வணிகத்தின் பெயர், அதன் வகை, முகவரி, உள்ளிட்ட தகவல்களை கொடுத்து சில தேவையான ஆவணங்களை பதிவு செய்து, அனைத்தையும் சரியாக பூர்த்து செய்தபின் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தபின் உங்களுக்கான கோரிக்கை படிவம் சென்றுவிடும்.