தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் சமீப காலமாக பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 15 ரயில் நிலையங்கள் அடங்கும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கிண்டி, பரங்கிமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டு, ஜோலார்பேட்டை, திருத்தணி, கூடுவாஞ்சேரி, மாம்பழம், அரக்கோணம் சூலூர்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர், பூங்கா, சென்னை கடற்கரை ஆகிய 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்களை அகலப்படுத்துவது, ரயிலின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் இதனால் சென்னையில் ரயில்வே நிலையங்களின் தரம் வேற லெவலில் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.