தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளை எளிதான முறையில் அணுகுவதற்காக தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தற்போது இலவச பயிற்சிகள் கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தில் பயிற்சி பெறுவதற்கு மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்புகள் மூலம் சிறந்து வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற மாணவர்கள் மே 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை தொடர்ந்து மே 25-ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விருப்பம் மாணவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/CENM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.