தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில அரசு புதிதாக கல்வி கொள்கையை உருவாக்குகிறது. இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் என்பவர் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவின் சித்தாந்தம் மாநில கல்விக் கொள்கையில் பின்பற்றப்படுகிறது. நான் என்னால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை மாநில கல்விக் கொள்கையில் வழங்கியுள்ளேன். நான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெற்ற தரவுகளின் அடிப்படையிலும் initial policy inputs (232 பக்கங்கள்) என்ற தலைப்பில் இடைக்கால அறிக்கையை உயர்மட்ட குழுவிடம் வழங்கியுள்ளேன்.

மாநிலக் கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். முத்த ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன் அவர் கூறும்படி நான் நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்துவதோடு அவர் விதிக்கும் நிபந்தனைகளை என் மீது கட்டாயமாக திணிக்கிறார். இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதனால் கனத்த இதயத்துடன் மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.