தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நிதி அமைச்சர் ஆக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பி டி ஆர், கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள் ஆகும்.

உலக அளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாகாவை முதல்வர் தனக்கு வழங்கியதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். பிடி ஆர் பெயரில் வெளியான ஆடியோ விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில் பிடிஆர் நிதியமைச்சர் பதிவிலிருந்து மாற்றப்பட்டார்.