உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக அவருடைய மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு வயலில் பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் தேவேந்திரகுமாரின் மகள் தன் தாயார் மாயாதேவி மீது தான் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து மாயாதேவியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது மாயாதேவிக்கு அனில் யாதவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்த நிலையில் தன் மனைவியை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக மாயாதேவி தன் கள்ள காதலனுடன் சேர்ந்து தன் கணவனை கொலை செய்து உடலை
6 துண்டுகளாக வெட்டி வீசியாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாயா தேவியை கைது செய்த போலீசார் அனில் யாதவை தேடி வந்த நிலையில் அவரையும் கைது செய்துள்ளனர்.

இதில் அனில் யாதவ் தப்பி ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தும் போது அவரது காலில் குண்டு பாய்ந்தது. மேலும் அவரை கைது செய்த காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.