குஜராத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாணவ மாணவிகளை வைத்து நாடகம் ஒன்றை நடத்தியது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவியரும் பங்கேற்றுள்ளனர். இந்த நாடகத்தின் காணொளி பள்ளியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டது. ஆனால் இந்த காணொளியில் இந்து மதத்தை சார்ந்த மாணவர்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் அணியும் தொப்பியை அணிந்து நடித்திருந்ததை பார்த்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சுமார் 250 பெற்றோர்கள் பள்ளி முன்பு கூடி அந்த நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதையடுத்து பள்ளியின் உரிமையாளரான அபாஸி என்பவரிடம் பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஞ்சய் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பள்ளியின் முதல்வரான வஸ்வாணியும் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அவர் காணொளி ஒன்று மூலமாக மாணவ மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.