யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக ஆயிரம் கோடிக்கு மேல் மதுபான விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரி கலால் துறை தற்போது புதிய அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான எந்தவித சுவரொட்டிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் போன்ற எந்தவித விளம்பரங்களும் செய்யக்கூடாது என கலால் துறை தடை விதித்துள்ளது. இதனை மீறி செயல்பட்டால் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.