தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம், பிபி டி, பி ஏ எஸ் எல் பி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகள் உள்ளது.

இந்த கல்வியாண்டில் இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் ஆகிய இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி உடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற ஜூலை 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.