செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஒரு சட்டமன்றம்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்  போடுகின்ற சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது…. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது….

இவர் ஏதாவது ஒரு வழியில் இந்த அரசாங்கத்தை முடக்கம் செய்ய வேண்டும்…… குறும்பு செய்ய வேண்டும்…. வில்லங்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஆளுநராக தான் இவரை பார்க்கிறேனே தவிர,  ஒரு பரஸ்பரம்….  மத்திய அரசாங்கத்திற்கும்,  மாநில அரசாங்கத்திற்கும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு அரசாங்க….

ராஜாங்க உறவுகளை ஒழுங்காக மெயின்டைன் பண்ணனும் மனப்பான்மையோடு…..  அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளும் ஆளுநராக இவரை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்….. இந்தியாவினுடைய ஜனாதிபதி….. மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இந்த ஆளுநரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தார்.