தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற பிறை தேடும் நிகழ்வில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பிறை தென்படவில்லை. இதனையடுத்து, ஷ்ரியத் முறைப்படி செப்டம்பர் 6ஆம் தேதி முதல் புதிய மாதம் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் என்பதால், அன்று தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.