திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகாஜனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாரிசெல்வி, மஞ்சுளா, மல்லிகா, செல்வி ஆகிய நான்கு பேருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டதற்காக அரசு போக்குவரத்து கழகம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 575 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு பேருந்து நிலையத்திற்கு வந்தது.

அப்போது நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்தனர். இதனை பார்த்த போக்குவரத்துதுறையினர் நீதிமன்ற ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிமனையில் இருந்து வெளியே வரும்போது பெருந்தை ஜப்தி செய்யலாம். ஆனால் பயணிகளுடன் செல்லும் பேருந்தை ஜப்தி செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என கூறினர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.