செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் விவகாரத்தில் பசப்பான வார்த்தைகள், ஆசை வார்த்தைகள்,  கைமதனமாக…  வாக்குகள் பெற வேண்டும் என்ற மோசடியான வார்த்தைகளை  எந்த காலத்திலும் நாங்கள் யூஸ் பண்ணவில்லை. எல்லாம் மோசடியான வார்த்தைகள். இப்போ முட்டையை எடுத்துக் கொண்டார். முட்டை யார் எடுப்பார் ? கூமுட்டைகள் தான் எடுக்கும்…  யார் எடுப்பா ?  முட்டையை எடுத்துக்கொண்டு,  காட்டுறாரு. சொல்லாமல் சொல்லுறாரு..

தேர்தலுக்கு காலத்தில் கண்டிப்பாக எங்களுக்கு முட்டை கொடுப்பார்கள் என்று…  அந்த நிலைமைதான் வரப்போகிறது திமுகவிற்கு…  அப்படி  ஏமாற்ற வேண்டாம். ஒரு கையெழுத்து போட்டு ஒழிப்போம் என்று சொன்னீங்களே… நீங்க எல்லாம் வாங்க நம்ம எல்லாம் கையெழுத்து போடலாம்… இதுதானா அந்த நீட்  ரகசியம்.

ஒரே கையெழுத்தில் நீட்டு ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு….  இப்பொழுது எல்லாரும் வாங்க கையெழுத்து போடுங்கள்…  நானும் போடுகிறேன் என்று சொன்னால், இதுதான் ரகசியமா? எப்படி மக்களை  ஏமாற்றி… வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதி கொடுத்து,  திசை திருப்பி இன்றைக்கு கையெழுத்து போடுகிறார்கள்.

ஆட்டுக்கும் தாடி நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை,   கவர்னர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்… அதே மாதிரி ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என சொல்லுறீங்க. அப்படி ரப்பர் ஸ்டாம்ப் என நீங்க சொல்லுற ஜனாதிபதி கிட்ட தான் கையெழுத்து இயக்கம் நடத்தி கொடுக்க போறீங்க. எப்படிப்பட்ட முரண்பாடு என்று பாருங்கள் என தெரிவித்தார்.