தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியின்மை காரணமாக பலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அரசு நிராகரிப்பு செய்த விண்ணப்பதாரர்கள் மனுவை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மனுக்களை மேல்முறையீடு செய்தார்கள். இதன் மூலமாக தற்போது ஏழு லட்சம் பேர் மக்கள் உரிமைத்தொகை  திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்து 60,000 உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.