டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி எஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த டிவிஎஸ் சீமா காலசித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொறியியல் துறையில் தொழில் முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமார் 500 மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக  ரோபோட்டிக்ஸ் & இயந்திரவியல் பயிலும் 500 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வுக் குழு விதிமுறைகளின்படி, நடைபெறும் தேர்வில் தேர்ச்சிபெறுவோர் மட்டுமே உதவித்தொகை பெறத் தகுதியானவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என அறியமுடிகிறது. அந்த வகையில் தமிழக பொறியியல் துறை மாணவர்களுக்காக 100 கோடி நிதியில் உதவித் தொகை வழங்கப்படுமென TVS நிறுவனம் அறிவித்துள்ளது.