ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்  மீது விரைவில் குண்டாஸ் பாயும் என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டியில் இருக்கக்கூடிய ஆளுநர் மாளிகை வாசலில் கருக்கா வினோத் என்பவர் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாமை எடுத்து வீசுகிறான்.  அவனை போலீஸ் பிடித்து மேலும் அவன் கையில் இருந்த இரண்டு பாட்டில்களையும்  பிடுங்கி, கிண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 3 நாள் கஸ்டடி கேட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். 3 நாளும் சைதாப்பேட்டை நீதிமன்றம் கஸ்டடி கொடுத்துவிட்டது. கஸ்டடி கேட்டு ஆஜர்படுத்த போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கும்போது ஆளுநரை மாற்ற வேண்டும்,  நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்,  10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடியவர்களை உடனடியாக ஆளுநர் கையெழுத்திட்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கை முன்வைத்து தான்  பெட்ரோல் பாம் வீசியதாக  கோசமிட்டபடியே வண்டியில் இறங்கி  நீதிமன்றத்திற்கு சென்றான்.

நீதிமன்றத்தில் உள்ளே  ஆஜர்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் காவல் நிலையதிற்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல் வாகனத்தில் ஏறும்  போது மாற்று, மாற்று ஆளுநரை மாற்று என்ற கோஷமிட்டு கொண்டு தான்  வாகனத்தில் ஏறினார். அங்கிருந்த  ஊடகத்துறையினரை பார்த்த கருக்கா வினோத்,

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஆளுநரை மாற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல் 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்க கூடியவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் . அந்த காரணமாக தான் நான் இவ்வாறு செய்தாய்தாக கூறினான். கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கருக்கா வினோத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.  அந்த வாக்குமூலத்தில் நீட் தேர்வில் விலக்கு வேண்டும். அதன் காரணமாக தான் இப்படி செய்தேன் என கூறினார்.  இந்நிலையில் அவன் மீது விரைவில் குண்டர் சட்டமும் பாய இருக்கிறது.  குண்டர் சட்டத்தில் அவனை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் சொல்லப்படுகின்றது.