தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா வல்லத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கீதா தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மகனும் பள்ளிக்கு சென்று விட்டான்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு கீதா அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து 50 பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.