கரூர் மாவட்டத்தில் உள்ள முனிநாதபுரம் பகுதியில் மருதாயி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் 2 பேர் டீ கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் மருதாயியிடம் “பண் தாருங்கள்” கேட்டுள்ளார். இதனால் கவரில் இருந்து மருதாயி பண்ணை எடுத்துக் கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்களே உஷார்…! மூதாட்டியிடம் 5 1/2 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“12 நாளாக தாயின் பிணத்துடன் வாழ்ந்த மகன்கள்”… துர்நாற்றம் தாங்க முடியாமல் பிணத்தை காட்டில் வீசிய அதிர்ச்சி… கண் கலங்க வைக்கும் காரணம்…!!!!
நாகப்பட்டினம் மாவட்டம் கப்பட்டினம் அருகே, சாக்கு மூட்டையில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், சடலமாக இருந்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த 75 வயதான மும்தாஜ் என்பதும், அவரது இரு மகன்கள் தாயை அடக்கம் செய்ய முடியாமல்…
Read moreஅதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…
Read more