செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  உங்களுக்கெல்லாம் தெரியும் கடந்த வருடம்  ஒரு பயங்கரவாதி கோவை மாநகரத்தின் உடைய அமைதியை குறைப்பதற்காக…. கார் சிலிண்டர் வெடிகுண்டு வாயிலாக அதை வெடிக்க செய்து…  இங்கு பாதிப்பை ஏற்படுத்த நினைத்திருக்கிறார்கள்…  ஒரு பெரிய குரூப்பே  அதில் இருக்காங்க…

நல்ல வேலை இறைவன் சங்கமேஸ்வரர் அருளால் கோவில் வாசல் முன்னால் அந்த விபத்து ஏற்பட்டு,  அதன் வாயிலாக கோவை பாதுகாக்கப்பட்டது. அந்த வழக்கு NIAயிடம்  கொடுக்கப்பட்டு, NIA சார்ஜ் சீட் போட்டு,  அந்த வழக்கின் விசாரணை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

கோவை மாநகரம் இம்மாதிரி ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை மாநில அரசு புரிந்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.  அந்த நாளை ஒட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு கோவையினுடைய பாதுகாப்பிற்காக… அமைதிக்காக… வளத்திற்காக.. நடத்தப்பட்டது.

தமிழகத்திலே முக்கியமாக சட்டம் – ஒழுங்கு – பிரச்சினை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல். புகார் அளித்தாலும் கூட,  அது பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த மாநில அரசின் மீதாக இருக்கிறது என விமர்சித்தார்.