செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கையெழுத்து இயக்கத்தை சென்னையிலே துவங்கி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இருக்கக்கூடிய இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி ஆகியோர் இதிலே பங்கேற்று முதல் கட்டமாக துவக்கப்பட்டது. இந்த கையெழுத்து பேரியக்கத்தினுடைய துவக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களே கையெழுத்திட்டு,  அதை துவக்கி வைத்திருக்கின்றார்கள்.

21ஆம் தேதி இந்த கையெழுத்து இயக்கம் மிகுந்த உற்சாகத்தோடு,  துவக்கப்பட்டு இருக்கிறது. இதிலே திராவிட முன்னேற்றக் கழகத்திலே 23 அணிகள்  இருக்கின்றன. மூன்று அணிகள் மட்டும் தான் இதில் துவக்கத்திலே பங்கேற்பதாக இருந்தது. இருந்தாலும் மற்ற அணியினரும் இதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு கூட்டத்தைக் கூட்டி,  அதிலே தமிழ்நாட்டிலும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனைத்து அணி செயலாளர்களையும் கூட்டி கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் இந்த கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்குரிய இந்த இயக்கத்தில் அனைத்து அணிகளும் செயல்பட வேண்டும்.

இதை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். நீட் எதற்காக நாம் எதிர்க்கிறோம் ? என்பதை விளக்க வேண்டும் என்பது போன்றவற்றை  இளைஞரணி செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் எங்களுக்கு சில பணிகளை அவர் கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையிலே இந்த கையெழுத்து இயக்கம் வெற்றி பெறுவதற்குரிய எல்லா நடவடிக்கைகளும் திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகம் சார்பாக எடுக்கப்பட்டிருக்கிறது  தெரிவித்தார்.