அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் பதவியை கையாளும்போது…  அரசு அதிகாரிகளையும் அரவணைக்கணும்…  மக்களுடைய குறைகளையும் கலையனும். அப்ப தான் அவர் முதலமைச்சர். அரசு அதிகாரிகள் சொல்றதெல்லாம் கேட்டுட்டு போறதுக்கு இல்ல… மக்களுடைய குறைகள் என்ன ?

அவர்களுடைய தேவைகள் என்ன ? என்று கேட்டு நிறைவேற்றிய ஒரு தலைவன்… குறுகிய காலத்திலே…  புரட்சித் தலைவர் இயக்கத்தில்… புரட்சித்தலைவி அம்மா கண்ட கனவை நிறைவேற்றிய தமிழன்.. ஒரு முதலமைச்சர் ஆறுமுகம் கொண்ட நம் பழனிச்சாமி, அவர்தான் இன்னைக்கு பொதுச் செயலாளர்.

தலைவர் சொல்லுவாரு MGR சொல்லுறாரு…  ”மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்” புரட்சி தலைவர் எப்படி பாடுறாரு பாருங்க? இன்று எல்லாரும் நடிக்கிறாங்க…  எல்லாரும் பாட்டு வைக்கிறாங்க… ஆனால் மக்களுக்காக,  இளைஞர்களுக்காக, சிந்தித்து தலைவருடைய படம் தான். மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். இது எல்லாருக்கும் பொருந்தும்.

மக்கள் பணியாற்றுகின்ற எல்லாருக்கும் பொருந்தும்…  மாற்று குறையாத மன்னவன் என்று போற்றி புகழ வேண்டும்…  எப்படி சொல்றார் பாருங்க ?  திருடாதே பாப்பா திருடாதே….  திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது சொன்னாரா ?  பாட்டு பாடி இருக்காரு பாக்குறீங்களா ? இல்லையா ? சின்ன பிள்ளைக்கு… அறிவுரை போதிக்கிறார்….. போதிதர்மன் புரட்சித்தலைவர் என தெரிவித்தார்.