கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,    அரசு பொது மருத்துவமனையில் இன்றைக்கு மழைநீர் தேங்கி அங்கே நோயாளிகள் எல்லாம் அவதிப்படுகின்ற காட்சியை பார்த்தோம்.  அதற்கு இந்த அரசு உடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு மழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி  கன்னியாகுமரி,  தென்காசி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எல்லாம் கனமழையில் வெள்ளத்தால் மூழ்கி சேதமடைந்து இருக்கின்றன. ஆகவே அந்த வாகனங்களை பழுது பார்க்க அங்கங்கே அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு….  முகாம்கள் அமைத்து அந்த இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களுக்கு  ரிப்பேர் செய்து கொடுக்கப்பட  வேண்டும்… பழுது பார்த்து கொடுக்க வேண்டும்… அதேபோல் நான்கு சக்கர கார்கள்….

இன்னைக்கு நான் தூத்துக்குடியில் பார்க்கின்ற பொழுது பக்கீல் ஓடை அருகிலே வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் எல்லாம் நீரிலே முழுவதும் மூழ்கி விட்டது. அதெல்லாம் சாதாரண மக்கள் அந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களெல்லாம் இன்றைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே அந்த கார்களையும்,  அந்தந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பழுது நீக்கி கொடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகின்றேன்.

இன்றைக்கு விவசாயிகள் இந்த கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விவசாயிகள் பயிரிட்ட நெருப்பயிர்கள் எல்லாம் கனமழையால் தண்ணீரால் மூழ்கி….  அந்த பயிர்கள் எல்லாம் சேதம் அடைந்து விட்டது. அந்த சேதமடைந்த பகுதிகள் எல்லாம் இன்றைக்கு அரசு அதிகாரிகளை கொண்டு….. வேளாண்மை துறை அதிகாரிகள்,

வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு அந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த அரசு மெத்தனப் போக்கை விட்டுவிட்டு வேகமாக,  துரிதமாக செயல்பட்டு இன்றைக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகின்றேன்.

அதேபோல திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றிலே அதிகம் வெள்ளம்  வந்த காரணத்தினால்… அதிக மழைப்பொழிவு திருநெல்வேலியில்  ஏற்பட்டதால் எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த எட்டு பேர் குடும்பத்திற்கும்….  அவர் வாழ்வாதாரரை முன்னிட்டு ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை இந்த அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.