தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற பொழுது…

தேர்தல் அறிக்கை கொடுத்த போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்று தான் மக்கள் புரிந்து கொண்டார்கள், நாங்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறோம். பேரவை தலைவர் அவர்களே….  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லிருக்கிறார்கள். ஏற்கனவே அரசு இருக்குற நிபந்தனை அடிப்படையிலே 60 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார். 

இதற்க்கு தமிழக சட்டசபையில் பதிலளித்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் விதிமுறைக்கு உட்பட்டிருக்கும் எதையும் நாங்க தள்ளுபடி செய்யல. அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க… எதாவது ஆதாரம் இருந்தால் கொடுங்க…   உடனடியாக கவனிக்கப்படும்… என்கிட்ட கொடுக்கணும்ன்னு கூட  அவசியம் கிடையாது. என்கிட்ட குடுக்குறத அரசியல் பாக்குறீங்கனா….  அங்க இருக்குற மாவட்ட ஆட்சியர் கிட்ட கொடுத்தால் கூட அவங்களே சரிபண்ணுவாங்க என தெரிவித்தார்.