செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில நீங்க பாத்தீங்கன்னா…. 1997 இல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்  நடந்த சம்பவம். உக்கடம் கோட்டை மேடு பகுதியில்  செல்வராஜ் என்ற ஒரு காவலர் கொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பாக இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கிற உக்கடம் கோட்டை மேடு பகுதியில ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள், ரவுடிகளை அனுப்பி… வீட்டுக்குள்ள புகுந்து சூறையாடி,  கோடிக்கணக்கான பொருட்களை சேதப்படுத்தி.. தீக்கிரையாக்கியதோடு மட்டும் அல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தி 19 பேர் இறந்தார்கள்.

19 பேர் இஸ்லாமியர்கள். இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் முதலமைச்சர் ? அவருடைய ஆட்சியிலே இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்,  19 பேரை  சுட்டு வீழ்த்திய அரசுதான் திமுக அரசாங்கம். அதுமட்டும் அல்லாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய சூழ்நிலைக்கு உருவாக்கியதும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான் என்பதை மறந்து, இப்பொழுது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.