செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிபிசியை பொறுத்தவரைக்கும் எங்கேயெல்லாம் உள்ளே வந்து இருக்கக்கூடிய பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அதனுடைய தொடர்ச்சியாக தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குறாங்க. உதாரணத்துக்கு உங்களுக்கு தெரியும் 2, 3 மாதங்களுக்கு முன்பு  பிபிசி குஜராத் பத்தி பிலிம் போட்டாங்க. இந்தியாவில் ஒளிபரப்பு ஆகல, உலகம் முழுவதும் போட்டாங்க. உலகம் முழுவதுமே கண்டனம் வந்துச்சி. பிரிட்டிஷ் பார்லிமென்ட்ல இத பத்தி பேசுனாங்க.

பிரிட்டிஷினுடைய பிரிமினிஸ்டர் இத பத்தி பேச வேண்டிய கட்டாயம். பிரிட்டிஷ் பார்லிமென்ட்ல வந்துச்சி. தயவு செய்து இந்தியால இருக்க கூடிய பத்திரிகையாளர்கள் நீங்க எல்லாருமே, கடுமையாக வேலை செய்யிறீங்க. அதுக்கு பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.  கடமைப்பட்டு இருக்கோம் . ஒரு ஜனநாயகம் வாழ்வதற்கு நியூஸ்,  மீடியா இருக்கனும். நாம்  கடமைப்பட்டு இருக்கோம். வாழ்த்துறோம், உங்களோடு நிக்கிறோம். 

ஆனால் தயவு செய்து நியூஸ் கிளிக்கையும் அல்லது பிபிசியுடைய வரி ஏய்ப்பையும் நடவடிக்கை எடுக்குறத மீடியா மேல மத்திய அரசு வன்மத்தை கக்குறாங்க…  இந்த மாதிரி தொந்தரவு பன்றாங்க.. அப்படிங்குற கருத்தை நான் கண்டிப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்துல பத்திரிக்கை சுதந்திரம் முக்கியம். அதே நேரத்துல பத்திரிக்கைக்கு அந்த சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நம்புற மனுஷன் நான் என தெரிவித்தார்.