கடந்த பிப்ரவரி 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வானது நடந்தது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, மார்ச் 16 ஆம் தேதி இன்று மாலை 4 மணிக்கு தேர்வு விடைக்குறிப்பு வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் GATE 2023 தேர்வு முடிவுகளை  கான்பூர் IIT சற்றுமுன் வெளியிட்டது.

IIT, NIT  மாதிரியான நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிக்க எழுதப்படும் நுழைவுத் தேர்வு தான் GATE. இந்த முடிவுகளை  gate.iitk.ac.in என்ற இணையதள பக்கத்தில் நேரடியாக தெரிந்துக்கொள்ளலாம். அதிகப்படியான மாணவர்கள் இந்த முடிவுகளை தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதால் இணையதளம் முடங்கி உள்ளது.