மக்கள் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த காலம் மாறி, தற்போது அனைத்து வீடுகளிலும் LPG சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்களுக்கு சமைப்பதற்கு சுலபமாக உள்ளது. ஆனால் அதில் சில அசம்பாவிதங்களும் உள்ளன. அதாவது முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டாலும், சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடிக்கின்றது. இச்சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் கேஸ் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டால் இலவச விபத்து காப்பீடு ரூ.50 லட்சம் வரை அரசு வழங்குகின்றது. இதனை http://mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த விபத்தை பதிவு செய்வதற்கு முதலில் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் LPG விநியோகத்தரை அணுகவும். அதன்பின், விபத்து நடந்த இடத்தில் காப்பீடு நிறுவனம் விசாரணை மேற்கொள்ளப்படும். பின் காப்பீடு நிறுவனம் மேற்பார்வைக்கு தெரிவிக்கப்படும். சரியான ஆய்வுகளுக்கு பின் உரிமை கோரல் தாக்கல் செய்யப்படும். இதை அனைத்தும் காப்பீடு நிறுவனம் கவனித்துக் கொள்ளும். அதன் பின்னர் காவல்துறையினரிடம் புகார் அளித்த காகிதத்தின் நகல், காப்பீடு பலன், மருத்துவ செலவிற்கான பில்கள் மற்றும் இறப்பு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அதற்கான பிரேத பரிசோதனை அல்லது இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை காப்பீடு நிறுவனத்தினிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உரிமை கோரிக்கை நிறைவேற்றப்படும்.