ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு இருக்கின்றது. இது தொடர்பாக மருத்துவமனைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனை ஆம்புலன்ஸால் அப்பெண்ணின் வீட்டை அடைய முடியவில்லை.
இதனால் ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் அப்பெண்ணை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தோளில் வைத்து தூக்கி வந்தனர். பின்னர் அந்தப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.