மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று முதல்வர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் shared school bus system என்ற திட்டத்தின் மூலம் தனியார் வாகனங்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இனி பள்ளி வாகனங்களில் பயணம் மேற்கொள்வார்கள்.

அதன் பிறகு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு மானியங்கள் வழங்குவதற்காக முதன்மை சுற்றுலா வாகனங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.‌ விவசாயிகளுக்கு வாகனங்களின் செலவை குறைக்கும் விதமாக விவசாய மறுமொழி வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுடைய விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு செலவழிக்கும் தொகை குறையும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.