பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பயணப் பாதுகாப்பிற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் ஓட்டப்படும் ஆட்டோக்களைச் சென்னையில் ஆண்கள் சிலர் ஓட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இந்நிலையில், இது குறித்து கவனம் செலுத்திய சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த ஆட்டோவும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்காகவே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யவே இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.