
இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணியின் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதேபோன்று தமிழகத்தில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அநாகரிகமாக பயணிகளிடம் பேசும் வீடியோ கூட அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி டிக்கெட் பரிசோதகர்களிடம் கேட்டால் தாங்கள் தவறு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தம் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கேமராவில் 20 மணி நேரத்திற்கு வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் இந்த கேமரா வசதி முதற்கட்டமாக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.