உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் ராமாயணம், பகவத் கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7000 அரசு பள்ளிகள் செயல்படுகிறது. அந்த அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு என்சிஆர்டியை மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் காலை பிராத்தனை கூட்டத்தில் மாணவர்கள் தினந்தோறும் ராமாயணம் மற்றும் பகவத் கீதை வாசகங்களை கூற வேண்டும் எனவும், ஒவ்வொரு நாளும் ஒரு வாசகம் கண்டிப்பாக கூறவேண்டும்.

வார இறுதியில் ராமாயணம், பகவத்கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் குழுவாக விவாதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை படிக்க சொல்வது கண்டனத்திற்குரியது என பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.